Monday, October 4, 2010

இந்தப் பயங்கரம் இந்தியாவிலும் நடக்கும்!

செய்தி: 1940 களில் அமெரிக்க மருத்துவர் குழு - மருத்துவ பரிசோதனைங்குற பேர்ல க்வாதமாலா (லத்தின் அமெரிக்க நாடு) நாட்டுல லட்சக்கணக்கான பேருக்கு பால்வினை நோய் பரப்பும் கிருமிகளை செலுத்தி சோதனை பண்ணியிருக்காங்க.

இந்தப் பயங்கரச் செய்தி எப்படியோ வெளில வந்ததும், தானைத்தலைவி ஹிலாரியும், கறுப்புத்தலைவன் ஒபாமாவும் ஒரு போன் போட்டு அந்த நாட்டுத் தலைவரிடம், 'சாரிங்க தெரியாம(?)  இந்தத் தவறு நடந்து போச்சு. 40களில் நடந்ததாலே, இதை அப்படியே விட்டுடுவோம். என்னதான் இருந்தாலும் இந்தமாதிரி அயோக்கியத்தனம் செய்றதல்லாம், எங்களுக்குப் பழக்கமில்ல' ன்னு சொல்லியிருக்காங்க.

விசயம் வெளில வந்ததுனாலே சாரி கேட்டாங்க. இல்லன்னா???

இதே மாதிரி பல சோதனைகள் நம்ம இந்திய 'எலிகள்'மீது இன்னும் நடந்துகிட்டுதான் இருக்கு. என்ன ஒண்ணு, இப்போதைய சோதனைகள் எல்லாம் ஓப்பனாவே வருது.

பி.டி பருத்தி, கத்தரிக்காய், வெண்டைக்காய்ன்னு ஒவ்வொன்னா வருது. சோளக்களி சாப்பிடறது நமக்கு அருவருப்பா இருக்கு. அதே சோளத்த செக்சியா பாக் பண்ணி, கார்ன் ஃப்ளேக்ஸ்ன்னு குடுத்தா பல்ல இளிச்சிட்டு சாப்பிடுறோம்.

நம்மள்ல எத்தன பேரு கேழ்வரகு கூழ் குடிக்கிறோம்? நம்ம மேட்டுகுடி மக்களுக்கு, ஏன் பெரும்பாலான மக்களுக்கு அது ஜெயில்லயும், நாகாத்தம்மன் திருவிழாலயும் மட்டும் கிடைக்கிற பொருளா தெரியிது. ஆனா, நெஞ்சுக்கொழுப்பு குறைய 'ஓட்ஸ்' குடிக்கிறோம்.

அமெரிக்காகாரன் எலியத் தேடி ஓடவேண்டியதில்ல. நாமளே போய் பெருமையா எலிவரிசையில போய் நிக்கிறோம்.

தக்காளி, வெண்டை, வெள்ளரி, கத்தரிக்காய், வெங்காயம் (பெருசு) இதுலல்லாம் என்ன சுவை இருக்கு இப்போ? பாக்க நல்லா பளபளன்னு இருக்கு. கோழி கூட கொழு கொழுன்னு இருக்கு, ஆனா நாட்டுக் கோழியின் சுவை இருக்கா? முன்னே இருந்த பாலின் சுவை இப்போ இருக்கா? முட்டை, நீர் (நிலத்தடி நீர் கெட்டுப்போயி வருஷமாச்சு, கெமிக்கல்களால்).......?????

இன்னும் சில வருடங்கள் கழிச்சு, இதே அமெரிக்காவுலருந்து நமது இந்திய பிரதமருக்கு இதே மாதிரி ஒரு போன்கால் வரும். அமெரிக்க அதிபர் 'சாரிங்க. இது 2007 ல நடந்ததாலே, எங்களால ஒன்னும் பண்ண முடியல. பெயர் தெரியா, குணப்படுத்த முடியா நிறைய கிருமிகள எங்க மன்சான்டோவும், மத்த கம்பெனிகளும் உங்க நாட்டுப் பயிர்களில் கோத்து வுட்டுட்டாங்க. பரவால்ல. அத அழிக்க 'சூப்பர் அழிப்பான் 2050' அதே கம்பெனிதான் தயாரிச்சு இருக்கு. நைசா அதையும் அனுமதிச்சுடுங்க'ன்னு சொல்லத்தான் போறார். நம்ம பிரதமரும் (யாரு அப்போ இருப்பா? ராகுலோட பேரன் ரோஷன் வாந்திதான்), இளிச்சுகிட்டே தலையாட்டத்தான் போறாரு.

இப்போதைக்கு, இலவச மருந்து, புயல் நிவாரணம், இலவச மருத்துவ முகாம், உங்க மருத்துவர், 'இந்த மருந்து இப்பத்தான் அமெரிக்காவுலருந்து வந்துருக்கு. ஒரு வாரம் ட்ரை பண்ணலாம்' -- இதுலல்லாம் கொஞ்சம் உசாரா இருங்க!!!

விரிவான செய்திக்கு:
http://timesofindia.indiatimes.com/world/us/Barack-Obama-apologizes-to-Guatemala-for-US-sex-disease-study/articleshow/6670605.cms

7 comments:

Santhosh said...

சூப்பர் பதிவு தல... முக்கியமா வாந்தி பேரை ரசிச்சேன் :)

UFO said...

விழிப்புனர்வைத்தூண்டும் படியான அவசியமான அதிரடி பதிவு...

நாம் சீக்கிரம் விழித்துக்கொள்ள வேண்டும்.

மிக்க நன்றி.

Thekkikattan|தெகா said...

நம்ம பிரதமரும் (யாரு அப்போ இருப்பா? ராகுலோட பேரன் ரோஷன் வாந்திதான்), இளிச்சுகிட்டே தலையாட்டத்தான் போறாரு.//

ஹாஹாஹா... ரோஷன் வாந்தி :)) -

என்ன செய்ய சுயபுத்திய கழட்டி அவிங்க லாப்ல கொடுத்திட்டு வந்ததாலேதான் இதெல்லாம்.

தேவையான பதிவு!

Unknown said...

@சந்தோஷ்

நன்றி, சகோ. வாந்திதான் நமக்கு கதின்னு ஆயிப் போச்சு. இம்மாம்பெரிய இந்தியாவுல, அந்தக் குடும்பத்த விட்ட வேற நாதியில்லங்குறது எம்மாம்பெரிய அவமானம்??

@UFO,

நன்றி. நம் சந்ததி நிம்மதியாக இருக்கவேண்டுமென்றால், கண்டிப்பாக விழிப்புடன் இருக்கவேண்டும். தங்கள் பங்குக்கும் விழிப்புணர்வை பரவ செய்யுங்கள்!

@தெகா,

நன்றிங்க. என்ன செய்றது? ஏமாத்தப்படுறோம்ங்குற சுரணைகூட இருக்கமாட்டேங்குதே?

Unknown said...

மாப்ளே நாம் அமேரிக்காகாரனோட எலியா மாறி ரொம்ப நாளாச்சு இந்த வேக்சின் விக்கிறதுக்காக அவன் முன் கூட்டியே நோய்களை அவுத்து விடுறான்.. இந்த கூத்து இன்னும் என்னென்ன வியாதிய கொண்டு வந்து சேக்கப்போவுதோ...!

Anonymous said...

//சோளக்களி சாப்பிடறது நமக்கு அருவருப்பா இருக்கு. //

Never!

Your article is very good.

Unknown said...

@கேயார்பி

நன்றி மாப்ளே!

@அனானி

நன்றி. சோளக்களி என்னோட ஃபேவரிட் கூட! லைட்டா வெல்லம் கலந்து சாப்பிட்டா....ம்ம்ம்ம்!