அஞ்சும் அஞ்சும் எத்தனைன்னு கண்டுபுடிக்க கால்குலேட்டரத் தேடும் இந்தக் காலத்துல, மனக்கணக்கு மூலமே மாணவர்களை, குறிப்பா கிராமத்து மாணவர்களைச் சிக்கலான கணக்குகளுக்கு விடை கண்டுபிடிக்கச் செய்து அசத்தி வருகிறார் ஒரு ஆசிரியர்!
அந்த ஆசிரியர் பெயர் : திரு.எம்.காளிமுத்தன். இராமனாதபுரம் அரசினர் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். 2006 ம் ஆண்டுக்கான 'டாக்டர். இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது' பெற்றவர்! கிராமத்து மாணவர்கள் தங்கள் ஞாபக சக்தியைப்் பயன்படுத்தி கணக்கிலும், ஆங்கிலத்திலும் வெற்றியடைய உதவி செய்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்த முறையைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு அவர்களின் புதைந்து கிடக்கும் சக்தியை வெளிக்கொணருவது இவரின் ஆசை. அதே சமயம், அவரின் இந்த பயிற்றுவிக்கும் முறைக்கு காப்புரிமை (patent) பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்!
திரு.காளிமுத்தன் அவர்களின் முயற்சி வெற்றி பெறவும், அவரின் தொண்டு தொடரவும் நம் வாழ்த்துக்கள்!
அவரையும் அவருடைய அசத்தும் மாணவர்களையும் நீங்கள் youtube-ல் சந்திக்கலாம்!
நன்றி: அருனா சேதுபதி அக்கா, ரவி வெங்கடேஷ் மற்றும் aimsindia.net
10 comments:
எ.பி.க :(
அதென்ன எ.பி.க?
எழுத்துப்
பிழையைக்
கண்டுக்கவேணாம்
தானே? :-)))
கயமை:-)
என்னை பின்னால் கவனிக்கவும் - அதானே எ.பி.க?
:-))
அசத்தல் வாத்தியார இருக்கிறதோட, காப்பூரிமை வாங்கும் அளவிற்கு உலகறிவும் பெற்றிருப்பதை நினைத்தால் ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில்... :)).
சூப்பரப்பு!!
:)
//எழுத்துப்
பிழையைக்
கண்டுக்கவேணாம்
தானே? :-)))//
:))
மேட்டரை விட்டுட்டு எ பி க பத்தியே எல்லாரும் பேசினா எப்படி?
துளசி அக்கா,
//எழுத்துப்
பிழையைக்
கண்டுக்கவேணாம்
தானே? :-)))//
தலைப்பையும உங்க பின்னூட்டத்தையும் சேர்த்துப் பாத்தா நல்லாதான் இருக்கு :)
'எழுத்துப் பிழையைக் கண்டுக்காத இவரல்லவோ வாத்தியார்'. நெறையப் பேருக்கு இவர் பற்றி தெரியனும்னுதான் எ.பி.க :)
சரி, வாத்தியாரைப் பத்தி ஒண்ணும் சொல்லலையே?்
வாங்க வடுவூராரே!
//என்னை பின்னால் கவனிக்கவும்//
இப்பிடி நான் சொன்னா, முதுகில டின் கட்டிடப் போறாங்க :) வீடியோ பாத்தீங்களா?
இளா, தெக்ஸ் - வருகைக்கு நன்றி!
வீடியோ பாத்தீங்களா?
வாங்க பெனாத்தலாரே,
//மேட்டரை விட்டுட்டு எ பி க பத்தியே எல்லாரும் பேசினா எப்படி?//
அதானே?? சரி, நீங்களும் மேட்டரப் பத்தி ஒண்ணும் சொல்லாமப் போறீங்களே? :)
Post a Comment