கடந்த ஒரு வருஷமா ஒன்னும் எழுதல (ம்க்கும்...அதுக்கு முன்னே, எழுதி கிழிச்ச மாதிரி). கடுமையான வேலை பளு, உக்காந்து எழுத நேரமில்லாதது (இப்படித்தான் சொல்லணுமாம்!), கிடைத்த நேரத்தில் சோம்பல், அதீத வெளியூர் பயணங்கள்னு ஒரு வருசம் ஓடிப்போச்சு!
நிறைய நண்பர்கள், 'நீ என்னதான் செய்றேப்பான்னு' கேக்குறாங்க. IT ல உள்ள சில நண்பர்களுக்கும் நான் இருக்குற Data Warehouse & Business Intelligence துறை கொஞ்சம் புதுசாத்தான் இருக்கு. இது ஒரு புக முடியாத துறைன்னு சில பேர் நினைக்கிறாங்க. அதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமா, துறை சார்ந்த வலைப்பூ ஒன்னு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதில், Data Warehouse & Business Intelligence பத்தின உபயோகமுள்ள (அத நீங்கதான் சொல்லணும்!!) பதிவுகள் எனக்குத் தெரிந்த எளிய ஆங்கிலத்தில் வரும்.
இந்தத் துறையில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், வேலை வாய்ப்புகளை தெரிவிக்கவும் இந்த வலைப்பூ பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்.
நண்பர்கள் இதைப்பற்றி ஆலோசனை எதுவும் இருந்தால் தயவு செய்து எனக்குத் தெரிவியுங்கள், நன்றி!
எனது துறை சார்ந்த வலைப்பூ ...... விரைவில்......!

9 comments:
தொடருங்க...
தொடருங்க. கண்டிப்பா!
BI? SAP?
//நண்பர்கள் இதைப்பற்றி ஆலோசனை எதுவும் இருந்தால் தயவு செய்து எனக்குத் தெரிவியுங்கள்//
இதுமாதிரி வலைப்பூ எழுத எல்லாம் ஒரு அப்ரெண்டிஸ் வெச்சிக்குங்க...நமக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் துபாயில் இருக்கான். ஒரு 50 ஆயிரம் சம்மளம் கொடுத்தா போதும். நீங்க சொல்ல சொல்ல டைப் செஞ்சி போஸ்ட் போட்டு...கமெண்ட்ஸ் எல்லாம் ரிலிஸ் செஞ்சி..அதுக்கு ரிப்ளேன்னு பயபுள்ள கருத்தா வேலைப்பார்ப்பான்.
ம்ம்ன்னு சொல்லுங்க பயபுள்ளைய தூக்கிடலாம்:))
குசும்பனை ஃபாலோ செய்பவர்களுக்கு அது யார் என்று தெரியும்! :-)
எழுதுங்க.. எழுதுங்க.. படிக்கக் காத்திருக்கிறோம்..!
அது ஒன்னும் இல்லன்னா நம்மகிட்ட இல்லாத இண்டலிஜென்ஸ் எல்லாம் உங்க துறையில இருக்கா அதான் பத்தடி தூரமாவே போயிட்டு இருக்கேன்.
நன்றிங்க, க.ரா.
நன்றிங்க, விவாஜி!
@விஜி ராம் - SAP BI also in the future, but we are not currently offering this. We offer training and consulting on ETL (Informatica), BI (MicroStrategy, MS SQLBI, Cognos and Business Objects)
@குசும்பன் -
50 ஆயிரம் சம்பளம் குடுக்குற அளவுக்கு வளர்ந்ததும், பையன தூக்கிடலாம் ;))
@வடுவூர் குமார் - ;))
எங்கே ஆளையே காணோம்?
@உண்மைத்தமிழன் - நன்றி அண்ணே!
@ஜோபா - நல்லவேளை என் துறையிலதான் இன்டலிஜென்ஸ் இருக்குங்குற உண்மைய எனக்கு மட்டும் சொன்னீங்க ;))))
மாப்பி இதெல்லாம் நெம்ப ஓவரு!!! தூசி தட்டுணக்கெல்லாம் ஒரு பதிவு:)))
Post a Comment