பிசினஸ் பார்ட்னர், அவரோட டொயோட்டா செக்கோயா வண்டிய ஊருக்குத் திரும்பி
போறவரைக்கும் ஓட்டிக்கோப்பான்னு சொல்லி குடுத்துட்டாரு. ரொம்ப நாளா ஓட்டாம,
பனியிலேயே இருந்ததாலே, பேட்டரி செத்துப்போச்சு. அவர் வீட்டுக்கு ஆல்
ஹேண்டா இருக்குற பாப் ங்குற வெள்ளைக்காரரோட பேட்டரி மாத்தலாம்னு போயிட்டு
திரும்பி வீட்டுக்கு வரப்போ, பின்னாடியே வந்த போலிஸ்கார் லைட்டைப்
போட்டுட்டாரு (இங்கே, பின்னாடி போலிஸ்கார் லைட்டைப் போட்டா, வண்டிய
ஓரங்கட்டிடணும்).
நாம ஒன்னும் தப்பு பண்ணலையேன்னு என்னான்னு கேட்டா, லைசன்ஸ் குடுன்னாரு. இந்தியன் லைசன்ஸக் குடுத்தேன். குழப்பத்தோட வாங்கிப் பாத்துட்டு, மின்னசோட்டா லைசன்ஸ் இல்லையான்னு கேட்டாரு. இல்லைன்னேன் (என்னோடது 2011ல் செத்துப்போச்சு). என்ன தப்பு பண்ணேன், எதுக்கு நிறுத்தினீங்கன்னு கேட்டேன். லைசன்சக் காட்டி இதுதான் பிராப்ளம்னு சொன்னாரு. நான், இந்தியன் லைசன்சோட ஒரு வருடம் வரை ஓட்டலாம்ங்குற மின்னசோட்டா சட்டத்தைச் சொன்னேன். எப்பிடித் தெரியும், அதுக்கு ஏதாவது டாக்குமென்ட் இருக்கான்னாரு. உங்க வெப்சைட் பாத்துதான் சொன்னேன்னேன், ஜெனிவா கன்வென்ஷன் படி அமெரிக்காவும், இந்தியாவும் பரஸ்பரம் சொந்த நாட்டு லைசன்ஸ் வச்சு 1 வருடம் வரை ஓட்டலாம். ஆனா, அது பிசினஸ் விசாவுக்கு மட்டும்தான் பொருந்தும்ங்குற சட்டத்தையும் சொன்னேன். பாஸ்போர்ட் இருக்கான்னாரு. பிசினஸ் பார்ட்னர் வீட்ல இருக்குன்னேன். இன்சுரன்ஸ் இருக்கான்னாரு, அதுவும் வீட்ல இருக்குன்னு சொன்னேன். ஒரு நிமிஷம்னு சொல்லிட்டு, அவர் வண்டிக்குப் போய் அவர் மேலதிகாரிக்குக் கால் பண்ணிருப்பாருன்னு நினைக்கிறேன்.
5 நிமிடம் கழிச்சு திரும்பி வந்து, இனிமே வெளில போகும்போது பாஸ்பார்ட்டோட போங்க, இப்போ நீங்க போகலாம்னு சொன்னாரு. உடனே, கூட வந்த பாப் (இவர் ஒரு முன்னாள் ராணுவத்தினர் - வெட்டரன்), நீங்க அவர் கேட்ட கேள்விக்குப் பதில் எதுவும் சொல்லலய்யேன்னு போலிசப் பாத்து கேட்டாரு. போலிஸ்கார், வண்டி ஓனருக்கு லைசன்ஸ் இல்லன்னு சொன்னாரு. ஒரே குழப்பமா போச்சு, இருந்தாலும், நாங்க எதுவும் தப்பா வண்டி ஓட்டல, எதுக்கு வண்டிய நிறுத்துனீங்கன்னு பாப் போலிஸ்கார் கிட்ட பிரச்சினை பண்ண ஆரம்பிச்சுட்டாரு. எனக்கு, ஏதுடா வம்பா போச்சு, அவரே நாமள போகச் சொல்லிட்டாரு, பாப் எதுக்கு பிரச்சினை பண்றாருன்னு, பாப் ஐ சமாதானம் சொல்லி, போலிஸ்கார்கிட்டே நன்றி சொல்லி வீடு வந்து என் பிசினஸ் பார்ட்னர்கிட்ட கேட்டா, அவர், ஆமா நான் கொஞ்ச நாளா சைல்ட் அலிமோனி கட்டல (முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தைக்கு சப்போர்ட்), சமீபத்துல இவரோட 22 வயசு பையன் மனநிலை பாதிக்கப்பட்டு துப்பாக்கியால சுட்டுகிட்ட்டு தற்கொலை செஞ்சுகிட்டான், அந்த சமயத்துல இவர் 2 மாசம் அந்த செக் அனுப்பாம விட்டுட்டாரு. அதனால, நிர்வாகம், அவரோட லைசன்ஸ தற்காலிகமா நிறுத்தி வச்சுருக்கு, இவருக்குத் தெரிவிக்காம (அல்லது, இவர் தெரிவித்தலை அறியவில்லை).
முதல்நாள், அதுவும் லாரி பெருசுக்கு இருக்குற செக்கோயா ஓட்டும்போது, கொஞ்சம் மெதுவா போனதால வந்த வினை, பின்னாடி வந்த போலிஸ்கார், தன் கணிணியில் வண்டி நம்பரை வச்சு, லைசன்ஸ் தற்காலிகமா நிறுத்தி வைக்கப்பட்டுருக்குனு தெரிஞ்சுக்கிட்டு, என் பிசினஸ் பார்ட்னர்தான் வண்டிய ஓட்டுறார்னு நெனச்சு நிறுத்தி இருக்காரு!
பார்ட்னர்கிட்ட சொன்னவுடன், அவரோட ஃபண்ட் மேனேஜர்கிட்ட போன் பண்ணி, உடனே பெண்டிங் கிளியர் பண்ணச் சொல்லிட்டாரு. எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை, கிளியர் பண்ற வரைக்கும், நாந்தான் பார்ட்னருக்கு ட்ரைவர் வேலை பாக்கணும் :(
பாடங்கள்:
1. என்னோட டவுன்டவுன் வாலன்டைன் பார்ட்டிக்கு சங்கு.
2. பார்ட்னர் அவரோட கிறிஸ்டியன் பார்ட்டிக்குப் போக முடியாம பயந்துகிட்டு வண்டி ஓட்டல.
3. பிசினஸ் விசாவுல இருக்குறவங்க கையோட பாஸ்போர்ட் வச்சுகிட்டு திரிங்க.
4. போலிஸ்கார்கிட்ட ஆர்க்யூ பண்ணாதீங்க.
5. என்னதான் அமெரிக்கா வாங்க வாங்கன்னு அழைச்சாலும், சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை (பார்ட்னர் புலம்பியது, தனி விவாதத்துக்கு ஏற்றது)