தாய்நாட்டை விட்டு வெளியில் இருக்கும் நிறையப் பேர்களுக்கு இணையம்தான் ஒரு முக்கிய இணைப்புப் பாலம். தாய்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவும், தாய்மொழியின் தொடர்பு விட்டுப் போகாமல் இருக்கவும் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி இணையம்தான். அதுபோல் தான் எனக்கும் இணையம் உதவியது. சிங்கப்பூரில் இருக்கும்போது தமிழ்நெட் எனும் இணைய தளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அப்போது தமிழில் அவ்வளவாக படைப்புகளோ, செய்திகளோ இணையத்தில் வெளியாகவில்லை.
அமெரிக்கா சென்றவுடன் வேலை நிமித்தம் பிசியாக இருந்தபோது இணையம் பக்கம் அதிகமாக வருவதில்லை. 2000 - 2001 ஆம் ஆண்டு வாக்கில்
தமிழ் பத்திரிகைகள் இணையத்தில் எனக்கு அறிமுகமாயின. அதில் விகடன் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது. புத்தகமாக படிக்க
முடியவில்லை என்றாலும் இப்படி இணையத்தில் கிடைப்பதை படிப்பதே ஒரு ஆனந்த அனுபவமாக இருந்தது.
அப்படிப் படிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் எனக்கு அறிமுகமானது சாருவின் கோணல் பக்கங்கள். எளிய நடையில் இருந்த அவரின் மெல்லிய
கிண்டலுடன் கூடிய எழுத்துக்களை விரும்பி படிக்க ஆரம்பித்தேன். நிறைய பொதுவான விஷயங்களில் எங்கள் இருவரின் பார்வைகளும் ஒரே மாதிரி
இருந்தது. புத்தகம் படிப்பதை கல்லூரியுடன் நிறுத்தி வைத்திருந்த எனக்கு அவர் எழுத்துக்கள் பிடிக்க ஆரம்பித்தன.
ஒரு முறை கோணல் பக்கங்களில் வந்த ஒரு படைப்பைப்பற்றி அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். என் மின்னஞ்சலையெல்லாம் அவர்
படிப்பாரா என நினைத்து நான் அனுப்பியதற்கு, ஆச்சரியமாக அவரிடமிருந்து பதில் வந்தது. அவருடைய மற்ற படைப்புகளப் படிக்கலாம் என ஆவலும்
பிறந்தது. இதற்கிடையில், அமெரிக்காவில் இயங்கிக்கொண்டிருந்த சில தன்னார்வ அமைப்புகளில் சேர்ந்து என் சமூக சேவை செய்யும் ஆர்வத்திற்கு
தீனி போட்டுக்கொண்டிருந்தேன். அதன் மூலம் கிடைத்த நட்புகளில் முக்கியமானது சகோதரர் ரவிச்சந்திரன் சோமு (வெட்டிக்காடு) மற்றும் லஞ்சம் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் சீரோ ரூபாய் புகழ் விஜய் ஆனந்த்!
ரொம்பவும் ஆக்டிவ் ஆக இல்லையென்றாலும், டாக்டர்
எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களை மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் நதி நீர் இணைப்பு பற்றி உரையாட அழைத்தது, திருச்சி கேகே நகர் அரசு பள்ளிக்கு கணிணி கிடைக்க ஏற்பாடு செய்தது, விழுப்புரம் பகுதி சகோதரிகளின் கல்வி உதவி போன்ற சில விஷயங்களில் ஈடுபாடு கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் சாரு அவர்களின் அறிமுகம் கிடைத்தது. ஏன் தமிழகத்தில் இருக்கும் இவரைப் போன்ற பிரபலங்களின் மூலமாக தமிழகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடாது என்று ரூம் போடாமல் யோசித்ததின் விளைவு, சாருவுக்கு என்று ஒரு யாஹூ குழுமம் ஆரம்பிப்பது என்று முடிவெடுத்தேன்! ஆரம்பித்தும் ஆகிவிட்டது.
அப்போதெல்லாம் தமிழில் தட்டச்சுவது அவ்வளவு சுலபமில்லை. முரசு அஞ்சலில் தட்டச்சி, அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து படமாகத்தான்
ஏற்றவேண்டும். குழுமம் ஆரம்பித்தவுடன், சில இணைய நண்பர்கள் சேர்ந்தனர். குழுமத்தின் நோக்கம், சாருவின் எழுத்துக்களை குழுமத்தில் ஏற்றச் செய்து, (நீண்டகால திட்டமாக) வெளிநாட்டில் வாழும் நண்பர்களைக் கொண்டு ஏதாவது தமிழகத்திற்குச் செய்யவேண்டும் என்ற ஆவல்!
ஒரு 20 பேர் சேர்ந்தனர், அவர்களின் யோசனைக்கு ஏற்ப அவர்களின் படைப்புகளும் குழுமத்தில் ஏற்றப்பட்டன. இடையில், சாருவின் புத்தகங்கள்
வேண்டி அவருக்கு பணம் அனுப்பினேன். அவரும் சீரோ டிகிரி, எக்ஸிஸ்டென்ஷியலியசமும் ஃபேன்சி பனியனும், நேநோ ஆகியவைகளும் ஒரு நீண்ட கடிதமும் அனுப்பினார். அவரிடம் குழுமத்தைப் பற்றி சொன்னேன். விரைவில் அதுபற்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார். நாட்கள் கடந்தன.
நண்பர்கள் படைப்புகளை தொடர்ந்து அளித்துக்கொண்டிருந்தனர். ஒரு முறை, சாரு ஒரு புத்தகம் இந்தியாவில் கிடைக்கவில்லையென்றும்,
அமெரிக்காவில் கிடைக்கச் சாத்தியம் அதிகமென்றும் ஒரு படைப்பில் குறிப்பிட்டு இருந்தார். Mothers and Shadows என்ற அந்தப் புத்தகத்தை
அமேசானில் வாங்கி, என் கையெழுத்திட்டு அவருக்கு அனுப்பி வைத்தேன்.
ஆனால், குழுமத்தைப் பற்றி சாதகமான எந்தவொரு அறிவிப்பும் அவரிடமிருந்து வரவில்லை. இதற்கிடையில், சில காரணங்களுக்காக என்னால் அந்தக் குழுமத்தைத் தொடர்ந்து நடத்த இயலவில்லை. குழும நண்பர்களிடம் சொல்லிவிட்டு, யாராவது தொடர விருப்பமிருந்தால் தொடரலாம் இல்லையென்றால் மூடுவிழா நடத்திவிடலாம் என்று கேட்டபோது, மூடுவிழாவிற்கே முழு ஆதரவு கிடைத்தது! மூடிவிட்டேன். தமிழகத்தில் ஒரு சமூக, பொருளாதார புரட்சி எனும் என் வேட்கை முடிவுக்கு வந்தது!!
அதன் பின் குழுமத்தில் இருந்த நண்பர்கள், மரத்தடி என்ற குழுமத்தை ஆரம்பிக்க இருப்பதாகவும், அதற்கு மாடரேட்டர் ஆக இருக்கும்படியும் மரத்தடி ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்த நண்பர் கேட்டார். அப்போதுதான், எனக்கு பர்சனலாக சில கமிட்மென்ட்ஸ், வேலை/இட மாற்றம் என நிறைய இருந்தது. அன்போடு அதை மறுத்து விட்டு, இணையத்தில் இருந்து ஒதுங்கி விட்டேன். கிட்டத்தட்ட 3 வருடங்கள் இணையத்தில் இணையாமல், வேலை, குடும்பம் என்று இருந்துவிட்டு, 2006-ல் தான் மறுபடி இணையத்தில் ஆக்டிவ் ஆகத் தொடங்கினேன். இதற்கு இடையில் மரத்தடி நன்றாக வளர்ந்து, இப்போது மிகப்பிரபலமாக இருக்கும் அருமையாக படைப்புகளை அளிக்கக்கூடிய நிறைய இணைய எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை பெற்றது. ரொம்ப வருடங்கள் இணையப் பார்வையாளனாக மட்டும் இருந்துவிட்டு இதோ மறுபடியும்!
எனக்கு, இலக்கியம், நவீன இலக்கியம், முன்/பின்/பக்க நவீனத்துவங்கள் அவ்வளவாக புரியாது. நான் ஒரு சாதாரண கிராமத்து வாசகன். அந்தமுறையில் எனக்கு சாருவின் கோணல் பக்கங்கள் மிகவும் பிடித்தமானது. இன்னும் நேரம் கிடைக்கும்போது சாரு ஆன்லைனில் படிக்க முயன்று வருகிறேன். இந்தியா திரும்பியபின், சராசரி இந்தியனாக ஆகிவிட்டபடியால், என்னுடைய முன்னுரிமைகள் பல மாறிவிட்டன. சாருவையும் நேரில் சந்திக்கவேண்டும் என்ற விருப்பம் தள்ளிப்போடப்பட்டுகொண்டே வருகிறது. அவருடைய சமீப புத்தக வெளியீட்டு விழா இரண்டின்போதும் சென்னையில் இல்லாததால், கலந்துகொள்ளமுடியவில்லை.
சமீபத்தில், ஃபேஸ்புக்கில் நண்பனாக சேர்த்துக் கொண்டு சாரு கேட்டார்,
'ராஜா, என்னை ஞாபகம் இருக்கிறதா' என்று. 'இருக்கிறது அண்ணா, இப்போது இந்தியனாகி விட்டேன்' என்று பதில் அனுப்பினேன்!
***

10 comments:
அப்ப இனிமே நீ ஜூனியர் இந்தியன் :))
மாப்ள, ஹிஹி ;))
அப்ப நீங்கள் எல்லாம் முதுபெரும் பதிவர்னு சொல்லுங்க
சாரு மனுசனுக்கு என்ன ஒரு ஞாபக சக்தி..
பசுமை நிறைந்த நினைவுகளே.........
இந்தியாவில் எப்போதும்'இந்தியனாகவே' இருக்கவேண்டும்.
தாரகமந்திரம் ஒன்னு இருக்கு: 'இங்கெல்லாம் இப்படித்தாங்க'ன்னு இருந்தால் பிரச்சனையே இல்லை!
முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.
http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html
தலைவரே, தூசி தட்டி பதிவுகளா போட்டு கலக்குறீங்க... வாழ்த்துகள் !!!
நட்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!!!
//தமிழகத்தில் இருக்கும் இவரைப் போன்ற பிரபலங்களின் மூலமாக தமிழகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடாது என்று ரூம் போடாமல் யோசித்ததின் விளைவு, சாருவுக்கு என்று ஒரு யாஹூ குழுமம் ஆரம்பிப்பது என்று முடிவெடுத்தேன்! ஆரம்பித்தும் ஆகிவிட்டது. //
நல்ல வேளை...ரூம் போட்டு யோசிக்கலை:)))
Welcome back thala....
மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் அண்ணே!!
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!
இந்த போட்டோவைப்பாக்கும்போது இயக்குநர் மிஷ்கினின் பிரதி மாதிரி இருக்கீங்க!! :)
Post a Comment