மன்னார்டி (மன்னார்குடி) சுற்று வட்டாரத்துல, எங்க ஊரு ரொம்ப பிரபலம். அடிதடி, வெட்டுகுத்து, சண்டை வம்புன்னு எதெதுல பேரு எடுக்கக் கூடாதோ அதுலல்லாம் எடுத்துருவாய்ங்க! சுத்துபட்டு ஊருலருந்து கவடி (கபாடி) வெளையாடக் கூட வரதுக்கு பயப்புடுவாங்க. இப்பல்லாம் அது கொஞ்சம் இல்ல நெறயா மாறியிருக்கு. நான் சின்னவனா இருக்குறப்போ, பேசி கேட்டு வளர்ந்த நெறய வார்த்தைகள் இப்போ யாரும் சொல்றதுல்ல (அ) சொல்றதுக்கு வாய்ப்பு இல்ல. அந்தச் சொற்களை நினைவு கூறும் ஒரு முயற்சிதான் இது!
கடையாணி - கட்டை வண்டி சக்கரம் அச்சிலிருந்து கழன்றுவிடாமல் இருக்கப் பயன்படும் கம்பி
மோத்தடி - (முகத்தடி/நுகத்தடி) வண்டிமாடுக்கும், வண்டிக்கும் இடையேயான தடித்த கம்பு
கடக்குச்சி/மொளக்குச்சி - வண்டிமாடு நுகத்தடியிலிருந்து கழலாமல் செல்ல உதவும் குச்சி. ஒரு மாட்டுக்கு ரெண்டு வீதம்
மூக்கணை - வண்டியை நிறுத்த பயன்படும் ஒரு வளைந்த மூக்கு மாதிரியுள்ள மரம்
மும்பாரம் - (முன் பாரம்) வண்டியின் முன்பக்கத்தில் அதிக எடை
பிம்பாரம் - (பின் பாரம்) வண்டியின் பின்பக்கத்தில் அதிக எடை
பார் - வண்டியின் முக்கிய ஆதாரம். நீளமான மரம்
இடுப்படசிம்பு - ஓட்டுனர் வசதியாக உக்கார உதவும் மூங்கில் பாதி
குத்துகழி - வண்டியில் பயனிகள் பிடித்துக்கொள்ளும் குச்சி
கட்டு - சக்கரத்தின் ஆரங்களை விழாமல் பிணைக்கும் கைவிரல் அளவு இரும்புப்பட்டை
குடம் - ஆரங்களை இணைக்கும் இன்னொரு முனை
அச்சு - சக்கரங்களை குறுக்குவாக்கில் இணைக்கும் இரும்புக்கம்பி
மசை - சக்கரங்கள் சத்தமின்றி ஓட உதவும் க்ரீஸ்
-------
வெள்ளலமே - காலையில் சீக்கிரமா
எம்ப்ளது - எண்பது
ங்கொப்புராட்டி - (ங்கொப்புரான) உன் அப்பன் மேல் ஆணை :)
வெரசா - விரைவாக
நெதேனைக்கும் - நித்தமும்
ஏல்லே - ஏ புள்ளே
மருவதடி - மறுபடி
டெம்பேரி - தற்காலிகமா (temporary)
டோனிக்கர் - எனக்குக் கவலை இல்ல (don't care)
பழேது - பழைய சாதம் (பழையது)
தொட்டுகிட - தொட்டுக் கொள்ள
கருதறுவா/கருக்கறுவா - கதிர் அரிவாள்
களக்கட்டு - களைக்கொத்தி
வம்பட்டி/மம்பட்டி - மண்வெட்டி
கொழுவு - ஏரில் இணைக்கப்படும் கொழு
கலாணி - களவாணி
ஓத்திரியம் - உபத்திரவம்
ரவைக்கு - ராத்திரிக்கு
கிளப்பு கட - டீக்கடை, சாப்பாட்டுக் கடை
கசாப்புக் கடை - ஆட்டிறைச்சி விற்கும் கடை
சப்பாத்து - செருப்பு
அலக்கு - காய் பறிக்க, இலை பறிக்க உதவும் நீண்ட குச்சி
தொரட்டி - அலக்கின் முனையில் இணைக்கப்படும் வளைந்த இரும்புக்கம்பி
பாதாளக் கரண்டி - கிணற்றில் வாளி, கயிறு விழுந்துவிட்டால் எடுக்கப் பயன்படும் முள் கம்பிகள்
பூட்டை - மரத்தினால் ஆன சக்கரம், கிணற்றில் பயன்படும்
கவலை - நீர் இறைக்கப் பயன்படும் ஒரு அமைப்பு
சகடை - இரும்பினால் ஆன நீர் இறைக்கப் பயன்படும் ஒரு உருளை
மரக்கா(ல்) - நெல் அளக்கப் பயன்படும் அளவி
கோட்டை - விதை நெல் பாதுகாக்கப் பயன்படும் வைக்கோலால் ஆன அமைப்பு
தவுடு - நெல்லின் அரைக்கப்பட்ட தோல்
கொடகல்லு - இட்லி மாவு அரைக்கப் பயன்படும் கல்
வரிகயிறு - தடியான கயிறு
வக்ய போர் - வைக்கோல் போர்
வெஞ்சனம் - சாப்பாட்டுக்கு 'தொட்டுக்' கொள்ள
மாங்யா - மாங்காய்
தேங்யா - தேங்காய்
மூக்கரையன் - மூக்கு சரியில்லாதவன்
மொட்ட மாடு - கொம்பு தீய்க்கப்பட்ட மாடு
கீதாரி - ஆடு/மாடு மேய்ப்பவர்
குறா(ள்) - மலட்டு பெண் ஆடு
கடும்பு - காய்ச்சிய சீம்பால்
பனம்புடுக்கு - ஆண் பனை மரத்தின் பூ
பலாமூசு - இளம் பலாக்காய்
பூனாச்சி - வெம்பிப்போன பலாக்காய்
வடுவு - மாங்காய் வடு
நன்னியரிசி - சூம்பிப்போன கடலை
கல்லை - கடலை
நெல் தூத்துறது - நெல்லை தூசியிலிருந்து பிரித்தல்
பொழுதோட்டு - மாலையில் நேரம் கழித்து
பொழுதனைக்கும் - நாள் பூராவும்
ஈச்சேர் - easy chair
தொட்டிமுத்தம் - முற்றம்
மாட்டு சாப்பு - மாடுகள் கட்டியிருக்கும் இடம்
கழந்தண்ணி/கழனித்தண்ணி - கெட்டுப்போன சாப்பாட்டுத் தண்ணி
நீராரம் - நீர்ஆகாரம்
சுடஞ்சி - சுடுகஞ்சி
இட்டேலி - இட்லி
சுளுக்கி - கூரான ஆயுதக்கம்பு
டேசன் - போலிஸ் ஸ்டேஷன்
பொனல் ஊது - போன் பேசு
தர்மாஸ்பத்ரி - அரசு மருத்துவமணை
இஞ்சுருசன் - ஊசி (injection)
டாக்கட்ரு - மருத்துவர்
ஊதாங்கொல - அடுப்பூத பயன்படும் குழல்
அஞ்சாரப்பொட்டி - அஞ்சறைப் பெட்டி
நைச்சுருவம் - சீரகம்
பெருஞ்சுருவம் - சோம்பு
விறாட்டி - வறட்டி
கிடியாரம் - கடிகாரம்
தலாணி - தலையணை
கரடு - ஓணான்
தட்டான் - தும்பி
இங்குனே - இங்கே
அங்குனே - அங்கே
எங்குனே - எங்கே
எவ்வளது - எவ்வளவு
ஹ்ம்ம்ம்... நெறைய வார்த்தைகள் எனக்கும் மறந்து போச்சு! சில 18+ வார்த்தைகள் கீழே.... பொருள் தெரிஞ்சவங்க சிரிச்சுகுங்க :)
சாண்டைக்குடிக்கி
தட்டுவாணி
குச்சுகாரி
கொட்டுகூடை
நோனி
தட்டுகூடை
பொச்சரிப்பு
30 comments:
நல்ல பதிவு தஞ்சாவூரான்!
இதிலே குறா(ள்) என்பது மலட்டு ஆடு என்பதை விட கன்னி ஆடு என்பதே சரி. அதை தான் கோழியா இருந்தா வெட கோழின்னு சொல்லுவோம்.
அதுபோல கெட்ட வார்த்தையில் ஒரு மதுரை கெட்ட வார்த்தையும் சேர்ந்துடுச்சு. அது நம்ம ஊர் பழக்கம் இல்லை.
அது போல வண்டி சக்கர ஆரம் எல்லாம் நடுவே சேரும் இடம் தான் அந்த கொடம் என்பதும்.
மூக்கனை சரி ஆனா அந்த நீளமான பார்க்கு தான் நோத்தடி அல்லது நுகத்தடின்னு நினைக்கிறேன்!
மத்தபடி எல்லாமே சரி தான். சூப்பர்!
சோடு - செருப்பு அல்லது நடைபாதை
காரியக்காரர் - கோவில் நிர்வாக குழுவில் அங்கம் வகிப்பவர்..
கம்முனாட்டி- கைம்பெண்
செவுள பேத்துருவேன் - காதை செவுடாக்கும் அளவுக்கு அறைவேன்.
இதையும் சேத்துக்க மாப்ள .. அப்படியே நம்ம வகையறாக்கள் பத்தியும் எழுதேன் ...
நல்ல பகிர்வுங்க தஞ்சாவூராரே... மாட்டுவண்டி, பாரவண்டி, சக்கரத்துக்கு கட்டுபோடறது, குடம் எல்லாமே ஞாபகத்துல இருக்கு... ஆனாலும் எங்கூரு பக்கத்துல இதில குறிப்பிட்ட பல வார்த்தைகள் புழக்கத்துல இருக்குங்க...உள்ளடங்கின கிராமமா இருக்கறதாலோ என்னமோ.. எனக்கும் மறக்கல...
கெட்டவார்த்தைகள்ல பொச்சரிப்புங்கறது தஞ்சாவூர் சொல்லா தெரியல...
அண்ணே கலக்கல்.
நெதேனைக்கும் - நெதேய்க்கும்
மருவதடி-மறுவாட்டி, மறுவத்ரம், மறுகிடுத்தம்,மறுமண்டு
இப்படி கொஞ்சூண்டு வேறுபாடுதான் எங்கூருக்கும் ஒங்கூருக்கும்.
நன்றி, அபி அப்பா!
குறா(ள்)- குறை ஆடு?
ரொம்ப தடவை 'அணைய விட்டும்' கருவுறாமல் இருக்கும் ஆட்டைத்தான் எங்க ஊரில் அப்படி சொல்லுவாங்க. வெடக்கோழி - சரிதான்!
எந்தக் கெட்ட வார்த்தையச் சொல்றீங்க? :) இது எல்லாமுமே எங்கூரில் சகஜம்!! விடுபட்டவை: கண்டார ஓழி, வல்லார ஓழி, ங்கொக்காள ஓழி - இவை எல்லாம் அன்றாட யுத்தங்களில் சகஜம் :)
கொடம் - சரிதான். விளக்க கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்.
நோத்தடி/நுகத்தடி - மாட்டுக் கழுத்தில் பொறுத்துவது. ஏருக்கும் இது பொருந்தும்.
நிறைய விடுபட்டுபோச்சு. யோசிக்க யோசிக்க இன்னும் நெறைய வருது.
//அப்படியே நம்ம வகையறாக்கள் பத்தியும் எழுதேன் ...//
எழுதிருவோம், கொல்லகாட்டாமுட்டு மாப்ள :)
//கெட்டவார்த்தைகள்ல பொச்சரிப்புங்கறது தஞ்சாவூர் சொல்லா தெரியல...//
வாங்க, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்துக்காரரே :)
எங்க ஊர்ல இது ரொம்ப பிரபலம்! 'ஏன் ஒனக்கு இவ்வளவு பொச்சரிப்பும் போறாமையும் (பொறாமையும்)' - இது எல்லா பெண்கள் யுத்தத்திலயும் கேட்கும் ஒரு கேள்வி!
நன்றி, பாரி தம்பி.
//நெதேனைக்கும் - நெதேய்க்கும்
மருவதடி-மறுவாட்டி, மறுவத்ரம், மறுகிடுத்தம்,மறுமண்டு//
மறுவாட்டி, மறுகெடுத்தம், போன கெடுத்தம், மறுமண்டு எங்கூர்லயும் உண்டு! நெறைய சொற்கள் விடுபட்டு போச்சு. ஞாபகம் வந்தவை மட்டும் போட்டேன். அதுவும் 4 நாளா பதிவு எழுத ஆரம்பிச்சு ஒரு வழியா முடிச்சேன்.
//மன்னார்டி (மன்னார்குடி) சுற்று வட்டாரத்துல, எங்க ஊரு ரொம்ப பிரபலம். அடிதடி, வெட்டுகுத்து, சண்டை வம்புன்னு எதெதுல பேரு எடுக்கக் கூடாதோ அதுலல்லாம் எடுத்துருவாய்ங்க! சுத்துபட்டு ஊருலருந்து கவடி (கபாடி) வெளையாடக் கூட வரதுக்கு பயப்புடுவாங்க//
தலைவரே,
உங்க ஊர் மன்னார்குடி வட்டாரத்துல மட்டும் பிரபலம் கிடையாது... சிங்கப்பூர்லயும்தான்:)
எப்படி எல்லா வார்த்தைகளையும் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்!
நல்ல பகிர்வு...
18+ வார்தைகள் படிக்கிறப்ப ஒரு மாதிரியா இருந்தது:(
அன்புடன்,
-ரவிச்ச்ந்திரன்
//உங்க ஊர் மன்னார்குடி வட்டாரத்துல மட்டும் பிரபலம் கிடையாது... சிங்கப்பூர்லயும்தான்:)//
வாங்க, ரவி. உண்மைதான். திரைகடலோடியும் நம்ம சோழ மன்னர்கள் மாதிரி எங்கூர்காரங்க பெருமை(?) சேத்துருக்காங்க!!
//எப்படி எல்லா வார்த்தைகளையும் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்!
நல்ல பகிர்வு... //
நன்றி! நெறைய விட்டுபோச்சு ..
//18+ வார்தைகள் படிக்கிறப்ப ஒரு மாதிரியா இருந்தது:(//
நானும் போடவேண்டாம்னுதான் பாத்தேன். இருந்தாலும், ஊரில் அடிக்கடி கேட்டுப் புளிச்சுபோன வார்த்தைகள்ங்கறதாலே போட்டுட்டேன். இப்போ யாரும் இந்த வார்த்தைகளை பயன்படுத்தறது இல்ல. எங்கூர் அந்தப் பெருமைய இழந்துகிட்டு வர்றது எனக்குப் பெருமையா இருக்கு :))
Welcome back தல.. அடிச்சி ஆடுங்க..
//Welcome back தல.. அடிச்சி ஆடுங்க..//
நன்றி, சகோ!
நல்ல பதிவு தஞ்சாவூரான்!
தஞ்சாவூர் என்று உங்கள் பெயர் படித்தவுடன் உங்கள் தளத்திற்கு ஆர்வத்துடன் வந்து விட்டேன் வாழ்த்துக்கள் நண்பரே நான் தஞ்சாவூர் தான்
KURUNI.....PATHAKKU..MODUMUTTY.THEKKANAMUTTY....SERUVAADU.....
VANNAANJAAL...
//தஞ்சாவூர் என்று உங்கள் பெயர் படித்தவுடன் உங்கள் தளத்திற்கு ஆர்வத்துடன் வந்து விட்டேன் வாழ்த்துக்கள் நண்பரே நான் தஞ்சாவூர் தான்//
வாங்க சரவணன். நன்றி!!
//KURUNI.....PATHAKKU..MODUMUTTY.THEKKANAMUTTY....SERUVAADU.....
VANNAANJAAL...//
அனானி, நீங்களும் எங்கூரா? இவ்வளவு வார்த்தைகள் தெரிஞ்சு வச்சுருக்கீங்க? இதுல, தெக்கனாமுட்டி எங்கப்பா அடிக்கடி சொல்லி திட்டும் வார்த்தை!!
நன்றி!
THIRUVAALIYATHTHAVAN.......KUNTHAANI..!(NAAN ORATHANADUNGHO!)
நண்பர்
உங்கள் ஊரில்மட்டும் அல்ல பரவாகொட்டை,உள்ளிகோட்டை,மற்றும் நம்ம ஊரை சுற்றி உள்ள கிராமங்கள் அனைத்துக்கும் பொருந்தும்
ஏன்னா நான் உங்க ஊரு மாப்பிள்ளை
//உங்கள் ஊரில்மட்டும் அல்ல பரவாகொட்டை,உள்ளிகோட்டை,மற்றும் நம்ம ஊரை சுற்றி உள்ள கிராமங்கள் அனைத்துக்கும் பொருந்தும்
ஏன்னா நான் உங்க ஊரு மாப்பிள்ளை//
நன்றி, ராயல் ராஜ்! சுத்துக் கிராமங்கள்லயும் பயன்படுத்துவாங்கன்னாலும், எங்க ஊர் கொஞ்சம் ஸ்பெசல்தான் :) உள்ளிக்கோட்டையிலேயே எங்க ஊர் பேச்சைக் கிண்டல் செய்வாங்க!
பரவாக்கோட்டை மாப்பிள்ளையா? எங்கே பொண்ணு எடுத்துருக்கீங்க? சந்திச்சதில் ரொம்ப சந்தோசம்!!
//THIRUVAALIYATHTHAVAN.......KUNTHAANI..!(NAAN ORATHANADUNGHO!)//
:) குந்தானி - சொல்லிட்டேன்!
ஒரத்தநாடுதான் எங்க பூர்வீகம்.
நன்றி!
hi,
I am Madhavan, working in KSA as Project Manager. I am also from Paravakottai only. Mail me with ur details please...
** சாண்டைக்குடிக்கி
தட்டுவாணி
குச்சுகாரி
கொட்டுகூடை
நோனி
தட்டுகூடை
பொச்சரிப்பு **
>>குச்சுகாரி<< made famous in Tamil blog by one notorious blogger. For the rest, meaning please. :)))
dear thanjavuran
i am from thevur(near keevalur)
happy to read tanjorean usages
RODHAI(wheel) vittupoche
balu vellore
dear thanjavuran
happy to read
i am from thevur(near kivalur)
RODHAI(SAKKARAM) vittu poche
balu vellore
@மாதவன்,
நன்றி.தனி மெயில் அனுப்பி இருக்கேன்!
@அனானி,
அர்த்தங்கள் எங்க ஊருக்கு மட்டுமே...சாரி!
@பாலு தஞ்சாவூர்,
நன்றிங்க. ரோதை மாதிரி நெறய விட்டுப்போச்சு!!
aha ... ஆஹா உண்மையில் மறந்துப் போன சொற்கள்தான்.
ஊரை விட்டு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டனவே
//பனம்புடுக்கு - ஆண் பனை மரத்தின் பூ//
இதை ரசித்தேன். கூச்சமில்லாக் கிராமிய மொழி வெளிப்பாடு. இதைப் பனம் பூம்பாழை; தென்னையாயின் தென்னம்பூம்பாழை என்போம். பேச்சுவழக்கிலும் அதே!!
ஈழத்தில் இவை இல்லையெனலாம். வேறு பேச்சு வழக்கேயுண்டு.
@இனியா,
நன்றிங்க.
@யோகன் பாரிஸ்,
நன்றி. //பனம் பூம்பாழை// பாளை?
தென்னைமரத்தின் இளம் பூக்களை பாளை என்றும் கூறுவோம்.
நல்ல பதிவு தஞ்சாவூரான்
good post.... bt indha words'a ippa irukura matrum varappora generations'la ketka mudiyumangira sandhegam dhan.....
Post a Comment